நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,
தலைக்குந்தா பகுதியில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஆண்டுதோறும் டிசம்பர் – ஜனவரி மாதங்கள் உறை பனிப்பொழிவு காலம் என்பதால் அங்கு நீலகிரியில் பனி கொட்டுகிறது. சில நாட்களுக்கு முன்பு உதகையை விட உயரம் குறைவான பகுதியான குன்னூரில் அதிகமாக குளிர் ஏற்பட்ட நிலையில், தற்போது உறைபனியும் குன்னூரில் கொட்டி வருகிறது.
இந்த சூழலில், தலைக்குந்தா பகுதியில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் பச்சை புல் வெளிகள் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தன. இருப்பினும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் உறை பனியிலும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
















