கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசுவதை தவிருங்கள் என கட்சியின் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசுவதை தவிருங்கள் என்றும்,காங்கிரஸ் கட்சியினர் கடமை, பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுவதற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இண்டி கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க கூடாது என்றும் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார்.
















