ஆரம்ப நிலையில் இருந்த 8 போர்களை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா – பாகிஸ்தான் போல, ஆரம்ப நிலையில் இருந்த 8 போர்களை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறினார்.
அணு ஆயுதங்களின் துணை இல்லாமல், தான் அதை நேர்த்தியாக செய்து முடித்ததாக குறிப்பிட்ட ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசுக்கு தன்னைவிட தகுதியானவர்கள் இருப்பதாக தோன்றவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.
போரை நிறுத்த யாரும் முன்வந்ததில்லை என குறிப்பிட்ட அவர், போரை நிறுத்தி ஒரு கோடி மக்களின் உயிரை காப்பாற்றியதற்காக, பாகிஸ்தான் பிரதமர் தனக்கு நன்றி கூறியதாகவும் தெரிவித்தார்.
















