மகர சங்கராந்தியை கொண்டாடக் கூடாது என வங்கதேச ஹிந்து மக்களை இஸ்லாமியர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இந்து பண்டிகையான மகர சங்கராந்தியை மக்கள் கொண்டாடக் கூடாது என இஸ்லாமியர்கள் மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், இந்து பண்டிகையை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒலிபெருக்கி வாயிலாக இஸ்லாமியர்கள் எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















