கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பெண் பாலினத்தை குறிக்கும் குறியீட்டு சின்னத்தை உருவாக்கி உலக சாதனை நிகழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து, பெண் இனத்தை பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழியை ஏற்றனர். இதையடுத்து, அவர்களின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
















