தென்காசி அருகே நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர்
பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தென்காசி முத்துமாலைபுரம் கிராமத்தில் பொங்கல் விழா களைகட்டியது.
தோரணமலை முருகன் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
விழாவில் ஸ்பெயின், கனடா நாடுகளை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















