கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது திரிணாமுல் காங்கிரஸ் – அமலாக்கத்துறை இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அறையில் இருந்து நீதிபதி வெளியேறினார். ‘
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசும், அமலாக்கத்துறையும் தாக்கல் செய்த மனுக்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இருதரப்பு வழக்கறிஞர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
ஒருகட்டத்தில், இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி வழக்கை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு அவையில் இருந்து வெளியேறினார்.
















