ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இடையே அரசு ஊடகங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு காரணமாக அங்குள்ள மக்கள், கடந்த இரு வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டத்தை கலைக்கவும், போராட்டங்களை தடுக்கவும் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் இதுவரை, குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தவறான செய்திகளை பரப்புவதாக கூறி இஸ்பஹான் நகரில் உள்ள ஐ.ஆர்.ஐ.பி., எனும் அரசுக்கு சொந்தமான வானொலி மற்றும் தொலைக்காட்சியின் ஒருங்கிணைந்த ஊடக மைய அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
















