வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகின்றன. அங்கு கடந்த ஒரு மாதங்களில் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பான விவகாரத்தில் பதற்றம் அடங்குவதற்குள், வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சுனம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஜாய் மகாபத்ரே என்ற இளைஞர், உள்ளூர்வாசியால் விஷம் கொடுக்கப்பட்டு, அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜாய் மகாபத்ரேவை கொலை செய்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்குள்ள இந்துக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















