கோவை பட்டீஸ்வரர் கோயில், மருதமலை முருகன் கோயில்களில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சுவாமி தரிசனம் செய்தார்.
2 நாட்கள் பயணமாக கோவைக்கு வருகை தந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்ற அவர், கோயில் யானைக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார். அதைத்தொடர்ந்து, மருதமலை முருகன் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
















