இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதென பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
‘தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை அவசியமா?அனாவசியமா?’ என்ற தலைப்பில் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் பங்கேற்று நிகழ்ச்சியின் தலைப்பு குறித்து விளக்கி பேசினர்.
தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்கள் செயலிழந்து இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதென்றும் தெரிவித்தனர்.
















