சிறையிலிருக்கும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித் சுமார் 5 வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில் இந்தக் கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமானை தவிர்த்து மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில் உமர் காலித்துக்கு ஆதரவாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி கடிதம் எழுதினார். அதில், நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம் என்றும் மம்தானி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சிறையிலிருக்கும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிற ஜனநாயக நாடுகளில் நீதித் துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
பொதுப் பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துவது கூடாது எனக் கூறியுள்ள ரந்தீர் ஜெய்ஸ்வால், இது போன்ற கருத்துகளுக்குப் பதிலாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது எனவும் சாடியுள்ளார்.
















