மகர சங்கராந்தி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
பின்னலாடை நகரான திருப்பூரில் சுமார் 4 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடுவதைப் போலவே வரும் ஜனவரி 14-ஆம் தேதி வட மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாட உள்ளது.
இதற்காக திருப்பூரில் தங்கிப் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல 2 நாட்கள் முதல் மூன்று நாட்கள் வரை ஆகும் என்பதால் இன்றே புறப்பட துவங்கினர்.
இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் காணப்பட்டது. திருப்பூர் வழியாக சென்ற டாடா நகர், தன்பாத், பிலாஸ்பூர், சந்தரகாட்சி, திப்ருகர் போன்ற ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வடமாநில தொழிலாளர்கள் படிக்கட்டில் நின்று பயணம் மேற்கொண்டனர்.
















