பாரம்பரிய பகுதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில், தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலங்களில் மதுரை மாவட்டத்தில் 65 இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்ததாக கூறினார். ஆனால், தற்போது 6 இடங்களில் மட்டுமே மஞ்சுவிரட்டும், ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
















