வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர கால அவகாசத்தை நீட்டிக்ககோரி தமிழக பாஜக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது சுமார் 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது.
இதனையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18ம் தேதி வரை காலஅவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் மனு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
















