ஈரானின் தெஹ்ரானில் நடந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மதகுரு அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று அயதுல்லா கமேனிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
இதனிடையே, ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் துடிப்பாக குற்றம்சாட்டிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், இளைஞர்கள் பயங்கரவாதிகளின் வலையில் சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு நிச்சயமாகச் செவிசாய்க்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.
















