இத்தாலியில் 60 வயது முதியவரை திருமணம் செய்ததற்காக தன்னை விமர்சித்தவர்களுக்கு இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
இத்தாலியைச் சேர்ந்தவர் 22 வயதான இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான மினியா பக்னி. இவர் தன்னை விட 42 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் மினியா பக்னியை கோல்டு டிக்கர் என விமர்சித்தனர். நிதி ஆதாயத்திற்காக மட்டுமே மினியா பக்னி முதியவரை திருமணம் செய்ததாகவும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து பேசியுள்ள மினியா பக்னி, தனது கணவரின் அன்பான மனம், அவர் நேசிக்கும் விதத்திற்காகவே அவரை மணந்ததாக கூறியுள்ளார். மேலும், ஒரு பெண்ணின் தேர்வை பணமாக குறைப்பது என்பது பழமையான மற்றும் மிகவும் நியாயமற்ற ஸ்டீரியோடைப்களில் ஒன்றாகும் எனவும் மினியா பக்னி ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
















