சீனாவில் தனியாக வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட “Are You Dead?”என்ற ஐபோன் செயலி, அந்நாட்டு ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பை இலக்காகக் கொண்டு இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பயனர் தொடர்ந்து 2 நாட்கள் செக்-இன் செய்ய தவறினால், அவர் ஏதோ ஆபத்தில் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்து, இந்தச் செயலி தானாகவே அவர் முன்னதாகவே பதிவு செய்து வைத்துள்ள நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ எச்சரிக்கை செய்தியை அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்ஸ்கேப் டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த செயலி, கடந்த 2025 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 12,400-க்கும் மேற்பட்டோர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், நீ இறந்துவிட்டாயா? என்ற பெயர் அச்சத்தை ஏற்படுத்துவதாகப் பயனர்கள் கருதுகின்றனர். இதற்குப் பதிலாக “நீ நலமாக இருக்கிறாயா?” (Are you okay?) அல்லது “நீ உயிருடன் இருக்கிறாயா?” (Are you alive?) எனப் பெயரை மாற்ற சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
















