பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் தனது மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள் சுந்தராம்பாளுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில், அன்றிலிருந்து வருடந்தோறும் அவருக்கு பொங்கல் சீர் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி 12-வது ஆண்டாக மகளுக்கு செல்லத்துரை சீர் கொண்டு சென்றார். 5 கரும்புகளை தலையில் சுமந்தபடி பல்வேறு வகையான சீர் பொருட்களை சைக்கிளில் வைத்துக்கொண்டு சுமார் 17 கிலோமீட்டர் தூரம் அவர் பயணித்தது அனைவரும் நெகிழ்ச்சியடைய செய்தது.
தமிழரின் பண்பாடு, கலாசாரம் அழியாமல் பாதுகாக்கும் செல்லத்துரையை வாழ்த்தி கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டது.
















