பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
தை மாதம் ஒன்றாம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் ஆயிரம் காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் களம்காண உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இரும்புக்கம்பி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
போட்டியின் நிலவரம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் முதன்முறையாக எல்.இ.டி. திரைகள் மூலம் ஸ்கோர் போர்டு அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
4வது சுற்று முடிவு
ஜல்லிக்கட்டு போட்டியின் 4ம் சுற்று முடிவில் 9 காளைகளை அடக்கி அவனியாபுரம் ரஞ்சித் முன்னிலை
புகையிலைபட்டியை சேர்ந்த டேவிட் வில்சன் 4 காளைகளை பிடித்து அசத்தல்
5வது சுற்றில் பச்சை நிற டி-சர்ட் அணிந்து 50 வீரர்கள் களமிறங்கி உள்ளனர்
சிறந்த காளைக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது
















