புதிய சிந்தனைகளும், புதிய தொடக்கங்களும் சேர்ந்து வாழ்வில் புதிய இன்பங்களை தரவல்ல தைத் திருநாளாம் இன்று, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகம் உயிர்வாழ பயிர் செய்து வாழ்கின்ற விவசாயப் பெருமக்களின் உழவுத் தொழிலை வணங்கும் விதமாகவும், உயிர்கள் வாழத் தேவையான ஒளியைத் தருகின்ற சூரிய பகவானை வணங்குகின்ற விதமாகவும், நாம் நமது முன்னோர் காலந்தொட்டு கொண்டாடி வருகின்ற திருநாள் இன்று. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றதொரு வாக்கியத்திற்கேற்ப, அனைத்து மக்களின் வாழ்விலும், மகிழ்வும் செல்வமும் பெருகிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
















