78வது ராணுவ தினத்தையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் களைகட்டின.
இதில், அந்த மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா, ஆளுநர் ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதலாவதாக, மோப்ப நாய்களுடன் ராணுவ வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் வீரர்கள் செய்த சாகசம் அனைவரையும் வியக்க வைத்தது.
வாகனத்தில் எழுந்து நின்றபடியும், கைகளை தலைக்கு மேலே உயர்த்தியபடியும் வீரர்கள் சாகசம் செய்து அசத்தினர்.
















