அமலாக்கத்துறை சோதனையை தடுத்ததாக எழுந்த புகாரில் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த மனுவானது நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சம்பவத்தை மிக தீவிரமான பிரச்னை என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென கூறினர்.
ஜனவரி 8-ம் தேதி நடந்த நிகழ்வுகளின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்குமாறும், அமலாக்கத்துறை புகார் மீது 3 நாட்களில் பதிலளிக்குமாறும் மேற்குவங்க அரசுக்கு நோட்டீஸ் வழங்கி நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















