முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிக்குவிக்-கின் 185வது பிறந்த நாளை ஒட்டி, தேனி அருகே அவரது உருவப் படத்திற்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தினர்.
அணையால் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் பாலர்பட்டி கிராமத்தில், பென்னிகுவிக்கின் 185வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று, ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்தனர்.
















