மாட்டு பொங்கலையொட்டி காரைக்குடி அருகேயுள்ள தனது தோட்டத்து வீட்டில் மாடுகளை அலங்கரித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அவைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினார்
மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி காரைக்குடி அருகேயுள்ள தனது தோட்டத்து வீட்டில் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா,
அவற்றுக்கு வெண் பொங்கல், பழவகைகளை படையலிட்டு வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து வழிபாட்டு பொருட்களை மாடுகளுக்கு உணவளித்து பண்டிகையை கொண்டாடினார்.
மாட்டு பொங்கலை முன்னிட்டு X -தளத்தில் வாழ்த்து தெரிவித்த H.ராஜா! அவர் போட்ட பதிவில்..
உலக உயிர்களுக்கெல்லாம் உணவு படைக்கும் உழவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்..!! உழவுக்கும், உழவர்களுக்கும் உறுதுணையாய் விளங்கும் மாடுகளை பாதுகாத்து பராமரிப்போம்..!! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! பொங்கலோ பொங்கல்..!! மாட்டுப் பொங்கல்..!!
















