பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 13-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு அருவிக்கரை களைகட்டியது.
















