கோவை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில், யானைப் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி டாப்சிலிப் வனப்பகுதியில் அமைந்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில், யானைப்பொங்கல் திருவிழா களைகட்டியது.
யானைகளை குளிப்பாட்டி அலங்கரித்த பாகன்கள், அருகேயுள்ள விநாயகர் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு, பழங்குடியினர், வனத்துறையினர் இணைந்து புதுப் பானையில் பொங்கல் வைத்து யானைகளுக்கு வழங்கினர்.
விழாவை காண குவிந்த சுற்றுலா பயணிகள், யானைகள் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















