சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே பொருளாதார ஏற்ற தாழ்வின்றி பெண்கள் வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர்.
வளையராதினிப்பட்டி கிராம பெண்கள், ஆண்டுதோறும் மாட்டு மாங்கல் அன்று, தங்க ஆபரணம் அணியாமல் விரதமிருந்து வெள்ளை நிற புடவை அணிந்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி நடப்பாண்டு அவர்கள், தங்களது குல தெய்வமான “பெருமாள் பொன்னழகி” கோயிலுக்கு பானைகளை தலையில் சுமந்து வந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
















