டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கில் அல் பலா பல்கலைக்கழகத்தின் 140 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாகினர்.
தற்கொலை படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர், அல் பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார். இதனால் அந்த பல்கலைக்கழகம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் அல் பலா பல்கலைக்கழகம் மீதான நிதி மோசடி குறித்து அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் பரிதாபாத்தில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவற்றின் மதிப்பு 140 கோடி ரூபாய் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
















