திருச்சி அருகே நவலூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர்.
திருச்சி மாவட்டம், நவலூர் பகுதியில் தைப்பொங்கலையொட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
மாடுபிடி வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிலையில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்
















