திருப்பரங்குன்றம் தர்காவின் சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் கந்தூரி விழா நடத்தத் தடை கோரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஸ்ரீமதி, சந்தனக்கூடு விழாவில் ஐம்பது பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக ஒசிர்கான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளதாகவும், அடுத்த விசாரணையின் போது, தனி நீதிபதியிடமே வாதங்களை வைத்து நிவாரணம் பெறுமாறும் கூறினர்.
மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
















