கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மற்றும் விஜய் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்படுவதாக அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு தேவையான தகவல்களை விஜய் வழங்கியதாகவும், அடுத்த கட்டமாக விஜய் நேரில் ஆஜராக சம்மன் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
திமுக சார்பான ஊடகங்கள் தவெக மீதும் விஜய் மீதும் அவதூறு பரப்பி வருவதாகவும், குறிப்பாக குற்றப்பத்திரிக்கையில் விஜய் இணைக்கப்படுவார் போன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
















