இசையமைப்பாளர் இளையராஜா ‘பத்மபாணி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகமும், மகாராஷ்டிரா அரசும் இணைந்து அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்படவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இதில், கலைத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28ஆம் தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவின் துவக்க நாளில் மாநிலங்களை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர். இளையராஜாவுக்கு நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















