உலகம் இதுவரை காணாத மிகப்பெரிய அணுமின் நிலையத்தை சீனா கட்டியெழுப்பி வருகிறது. இரு வெவ்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா மேற்கொள்ளும் இந்த முயற்சி உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது…
உலகம் இதுவரை கண்டிராத அணுஉலை… புது முயற்சியில் சீனா… இதுவரை உலகம் முயற்சி செய்யாத முறையில் மின்சாரத்தை தயாரிக்கும் முயற்சியில் முனைப்பு காட்டி வருகிறது சீனா…
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங் நகரில் உலகின் முதல் கலப்பின அணுஉலையை அமைக்கிறது சீனா.. சூவே அணுமின் நிலைய தளத்தில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியிருக்கும் சூழலில், இந்த திட்டம் சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நிலையம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….
இந்த ஆலை இரண்டு வெவ்வேறு அணுசக்தி தொழில்நுட்பங்களை ஒரே வளாகத்தில் ஒன்றிணைக்கிறது.. ஹுவாலாங் ஒன் அணு உலை, அழுத்தப்பட்ட நீர் உலையை உயர் வெப்பநிலை வாயு மற்றும் குளிரூட்டப்பட்ட உலையுடன் இணைக்கிறது…
இதுபோன்ற முயற்சியை உலகில் யாரும் செய்ததில்லை என்றும், இது உயர்தர நீராவியை வழங்கி, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.. முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதில் 2 ஹுவாலாங் ஒன் அலகுகள் மற்றும் உயர் வெப்பநிலை வாயு – குளிரூட்டப்பட்ட உலை அலகு ஆகியவை அடங்கும்…
ஹுவாலாங் ஒன் அணு உலைகள் சீனாவால் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை அணுசக்தி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டவை…
உயர் வெப்பநிலை வாயு – குளிரூட்டப்பட்ட அணு உலை நான்காம் தலைமுறை அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது…
இவை ஒன்றாக மின்உற்பத்தி மற்றும் தொழில்துறை ஆற்றல் தேவைகள் இரண்டையும் பூர்த்தி செய்ய ஆலையை அனுமதிக்கின்றன..
கலப்பின அணுஉலை திட்டம் பயன்பாட்டுக்கு வந்ததும், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை பெருமளவில் குறைக்கும், அதாவது சீனாவின் ஓராண்டு நிலக்கரி நுகர்வு 7.26 மில்லியன் டன்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
இதன் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு கிட்டத்தட்ட 19.6 மில்லியன் டன்கள் குறையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலை லியான்யுங்காங் பெட்ரோ கெமிக்கல் தளத்திலும், அதை சுற்றியுள்ள தொழில்துறை மண்டலங்களிலும் குறைந்த கார்பன் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது..
சூவே அணுமின் நிலையத்தின் முதல் கட்டம் 2032ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹுவாலாங் ஒன் உலை என்பது சீனா பொது அணுசக்தி குழு மற்றும் சீன தேசிய அணுசக்தி கழகத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய பயன்பாட்டு தேவைகள் சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பெய்ஜிங் அடுத்த தலைமுறை அணுசக்தி மற்றும் தொழில்துறை கார்பன் நீக்கத்தில் முன்னணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
சீனா உருவாக்கும் கலப்பின அணு உலை வடிவமைப்பு உண்மையில் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதன் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை உலகம் உற்று நோக்கியுள்ளது-
















