காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற விஜயராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற 3-ம் நாள் தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்புக்குழியில் அமைந்துள்ள மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாள் கோயிலில், ஆண்டுதோறும் தை மாதம் ஜடாயு தீர்த்தத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வாடிக்கை. அந்த வகையில் கடந்த 18-ம் தேதி ஜடாயு தீர்த்தத்தில் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக தொடங்கியது.
நேற்று நடைபெற்ற 3-ம் நாள் தெப்பல் உற்சவத்தில், விஜயராகவ பெருமாள் மரகதவல்லி தாயாருடன் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 7 முறை வலம் வந்த பெருமாளையும், தாயாரையும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
















