விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல், சேதமடைந்த மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் என அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடுப்பு எலும்பில் ரத்த ஓட்டக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் குணமாக்கியுள்ளார்.
இந்த சிகிச்சை குறித்து அப்போலோ ஆயுர்வேத மருத்துவமனையின் உதவி தலைமை மருத்துவர் அஜித் குமார் விவேகானந்தன், மருத்துவர் ஸ்மிதா ஜயதேவ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து அஜித்குமார் விவேகானந்தனிடம், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியது போல், விரதமிருந்தால் புற்றுநோய் செல்கள் அழியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல், சேதமடைந்த மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் என கூறினார். மேலும் இது அறிவியல் ரீதியாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
















