கடும் பனிப்பொழிவுக்கு இடையே ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மயங்கி விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்லாயிரம் பாலோயர்ஸ்களை வைத்துள்ள இரண்டு பெண்கள், தங்களை பின்தொடரும் இணையவாசிகளை கவரும் வகையில், கடும் பனிப்பொழிவில் சேலை அணிந்தபடி நடனமாடி ரீல்ஸ் எடுத்தனர்.
அப்போது, ஒரு இன்ஸ்டா பிரபலத்துக்கு ஆக்சிஜன் அளவு குறைவு காரணமாக தலைச்சுற்றல், கடுமையான தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு பெண் தனது கையைப் பிடித்துக் கொண்டு வலியால் துடிப்பதைக் காண முடிந்தது.
இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
















