பூந்தமல்லி அருகே பயணிகள் அதிகம் வராத இடத்திற்கு பல லட்சம் செலவிட்டு பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் பெரிய அளவிலான பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வர தயாராக உள்ளது.
ஏற்கனவே, பூந்தமல்லியில் இயங்கி வந்த போக்குவரத்து பணிமனை, கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் பயணிகள் அதிகம் கூடுவதில்லை.
இந்நிலையில், தேவையின்றி பல லட்சம் செலவு செய்து பேருந்து நிறுத்தம் கட்டி, அரசு நிதியை வீணடிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















