குரோஷியாவில் இந்திய தூதரகத்திற்குள் புகுந்து தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தான் கும்பலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் புகுந்து இ ந் திய தேசிய கொடியை அகற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்தியாவும் ஜாக்ரெப் நகரில் செயல்படும் இந்திய தூதரகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந் தீர் ஜெய்ஸ்வால், இந்த விஷயத்தை புது தில்லி மற்றும் ஜாக்ரெப்பில் உள்ள குரோஷிய அதிகாரிகளிடம் கடுமையான முறையில் எடுத்துச் சென்றதாகவும், குற்றவாளிகளை அவர்களின் கண்டிக்கத்தக்க மற்றும் சட்டவிரோத செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
















