வலுவான பொருளாதார அடிப்படைகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளால் அடுத்த சில ஆண்டுகளின் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து விளக்கினார்.
செமி கண்டக்டர்கள்,செயற்கை நுண்ணறிவு, உற்பத்தி மற்றும் பசுமை எரிசக்தி உள்ளிட்ட அனைத்து பொருளாதார துறைகளிலும் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
உலகளாவிய கடன் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா மிகவும் உறுதியான நிலையில் உள்ளது எனவும் பல வளர்ந்த நாடுகளின் கடன் ஜிடிபி விகிதம் 120 சதவீதம் முதல் 280 சதவீதம் வரை இருக்கும் நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் 85 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது எனவும் கூறினார்.
வலுவான பொருளாதார அடிப்படைகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளால் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் தெரிவித்தார்.
















