நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-க்கு ஒன்று என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
தொடர்ந்து கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது.
டாஸை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா, 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் விளாசியது.
இதன் மூலம் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 82 ரன்கள் குவித்தார். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
















