ஹரியானா மாநிலம் குருகிராமில் பட்டப்பகலில் நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி காரில் கடத்திச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குருகிராமில் பணத் தகராறு காரணமாக பட்டப்பகலில் டெலிவரி பார்ட்னரை ஒரு கும்பல் கடத்தி சென்றது.
இதனை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து இளைஞரை கடத்திய ஜெயபீர் மற்றும் அமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணத்தகராறில் கடத்தியது தெரியவந்தது.
















