மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில், தந்தை – மகன் நூலிழையில் உயிர்பிழைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
சோலாப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர், பள்ளியில் இருந்து மகனை அழைத்து செல்வதற்காக சாலையோரத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்தார்.
அப்போது அந்நபர் சிறுவனை அழைத்துக் கொண்டு கிளம்ப தயாரான போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து புகை கிளம்பியுள்ளது.
இதனைக் கண்ட அந்நபர் உடனடியாக மகனை அழைத்துக் கொண்டு தூரமாக சென்றார். பின்னர் சிறிது நேரத்திலேயே ஸ்கூட்டரின் பின்புறத்தில் தீப்பற்றியது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக தந்தையும், மகனும் உயிர் தப்பினர்.
















