கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் எம்.பி சசிதரூர் புறக்கணித்துள்ளார்.
கட்சி மேலிடம் தன் பங்களிப்பை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை அவமதிப்பதாகவும் சசிதரூர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டதால் ஆலோசனை கூட்டத்தை சசிதரூர் வேண்டுமென்றே புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
















