ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்த நிலையில், சனே தகாய்ச்சி முதல் பெண் பிரதமராக கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் வழக்கமான கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையைக் கலைப்பதாக தகாய்ச்சி அறிவித்தார்.
தற்போதைய ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 2028ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
















