சேலம் மாவட்டம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மற்றும் அவரது உறவினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேச்சேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்ற திமுக நிர்வாகி, பேருந்து நிலையத்தில் 2 கடைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அங்கு அவரின் தாய் மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து போலீசாரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையென அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே அப்பகுதியின் கவுன்சிலராக உள்ள திமுக நிர்வாகி பிரசாந்தின் மனைவி தனம், பஞ்சாயத்து கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை எனவும், அவரின் கணவரே கூட்டத்தில் பங்கேற்று அதிகாரம் செலுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















