ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள தேர்வு வாரியம், நடப்பாண்டில் இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் தேர்வு மே மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல திருவள்ளுவர் பல்கலை உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனவும், அதற்கான தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள தேர்வு வாரியம், ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது
அந்த வரிசையில் நடப்பாண்டில் டெட் தேர்வை இரண்டு முறை நடத்த திட்டமிட்டுள்ள தேர்வு வாரியும், ஒரு தேர்வை மே மாதத்தில் அறிவித்து ஜூலை மாதம் நடத்த உள்ளதாகவும், மற்றொரு தேர்வை அக்டோபரில் அறிவித்து டிசம்பர் மாதம் நடத்த உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செட் எனப்படும் மாநில தகுதி தேர்வை ஜூலை மாதம் அறிவித்து செப்டம்பர் மாதம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த தேர்வு திட்டம் மாறுதலுக்கு உட்பட்டது எனவும், காலி பணியிட விவரங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் டிஆர்பி இணையதளங்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
















