ராஜஸ்தானில் சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்துக்காக 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு டேட்டிங் செயலி மூலம் பழகி துஷ்யந்த் சர்மா என்பவரை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் பிரியா சேத் என்பவரும், அல்வார் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் அனுமார் பிரசாத் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் 2023ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சங்கனேரில் உள்ள திறந்தவெளிச் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குற்றவாளி ஜோடி சொந்த ஊரில் திருமணம் செய்து கொண்டது. 6 பேரை கொன்றுவிட்டு இருவரும் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு தரப்பும், திருமணமும் பரோலும் அரசியலமைப்பு அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை என மற்றொரு தரப்பும் இணையத்தில் விவாதித்து வருகின்றன.
















