தமிழக காங்கிரசில் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முக்கிய நிர்வாகிகளால் பரிந்துரைக்கப்பட்டதால், கட்சிக்காக பாடுபட்டவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காங்கிரசில் விருப்ப மனு அடிப்படையில் 71 பேர் புதிய மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி, மாவட்ட தலைவர் தேர்வுக்கு மேலிட பார்வையாளர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த குழுவினர் மாவட்டந்தோறும் விருப்ப மனு பெற்று 6 பேரை பரிந்துரை செய்தனர்.
ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், பழைய நிர்வாகிகளின் ஆதரவாளர்களே பதவி பெற்றுள்ளதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
90 சதவீதம் பேர் உள்ளாட்சி தேர்தலில் கூட போட்டியிடாதவர்கள் என்றும், மாறாக வசதி படைத்தவர்கள் எனவும் கூறியுள்ளனர்.
2026 சட்டசபை தேர்தல், அடுத்த வரும் உள்ளாட்சி தேர்தலை குறிவைத்தே மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















