சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் கல்வி நிறுவனத்திற்காக நூற்றாண்டு பழமையான மரங்களை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி சாய்த்ததாக புகார் எழுந்துள்ளது.
காரைக்குடி கல்லூரி சாலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை என நிழல் தரும் மரங்கள் உள்ளன.
இவை தனியார் கல்வி நிறுவனத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அவற்றை நெடுஞ்சாலை துறையினர் வெட்டியதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















